Welcome to யோவான் சுவிசேஷம் மெகா வேத வினா போட்டி

Please provide your contact details to inform you about prizes,if you win.

Please note the "Reference code" without fail while using the save option. Without reference code, website can't load your previous answers.

If the submit button not working, please check that all questions are answered.

1. 
தேவனுடைய வார்த்தை மாம்சமானது (இயேசு) இயேசுவே மெய்யான ஒளி. அந்த மெய்யான ஒளியின் நோக்கம் என்ன?

2. 
"கர்த்தருக்கு வழியைச் செவ்வை பண்ணுங்கள்" என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் யார்?

3. 
கானாவூர் கலியாணத்தில் இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார். சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். யார் இயேசுவுக்கு கீழ்படிந்து கற்சாடியில் தண்ணீரை நிரப்பினார்கள்?

4. 
எருசலேமில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார்.ஆனால் அவர் அவர்களை நம்பி இணங்கவில்லை. ஏன்?

5. 
இராக்காலத்திலே யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு இயேசுவை சந்தித்து போதிக்கப்பட்டான். இயேசுவிடம் நிக்கொதேமு கேட்ட கேள்வி என்ன?

6. 
உலகம் ஒளியைப் பார்க்கிலும் எதை விரும்புகிறது?

7. 
இயேசுவால் சமாரியா ஸ்திரியின் வாழ்க்கையில் நடந்த மாற்றம்: இயேசு அவளை எங்கே சந்தித்தார்?

8. 
நீ போகலாம் உன் குமாரன் பிழைத்திருக்கிறான்" என்று இயேசு சொன்ன போது என்ன நடந்தது?

9. 
பெதஸ்தா குளத்தண்டையில் 38 வருடம் வியாதியாய் கிடந்த மனுஷனை இயேசு சுகமாக்கின சம்பவம்: இயேசு அவனை தேவாலயத்தில் கண்டு என்ன கூறினார்?

10. 
வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தால் என்ன உண்டென்று எண்ணுகிறீர்கள்?

11. 
இயேசு 5000 பேரை போஷித்தல். ஜனங்களுக்கு எதை பெருக செய்து ஆகாரம் கொடுத்தார்?

12. 
இயேசு தண்ணீரின் மேல் நடந்தார். படகில் இருந்த சீஷர்கள் பயப்படும் போது இயேசு என்ன சொன்னார்?

13. 
இயேசு கூடாரப்பண்டிகையில் உபதேசம் பண்ணினார். சிலர்,அவர் நல்லவர் என்றார்கள். வேறு சிலர், அவர் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்றார்கள். அவர் யாருடையதை உபதேசம் பண்ணினார்?

14. 
உலகம் ஏன் இயேசுவை பகைக்கிறது?

15. 
இயேசு விபசார பெண்ணை மன்னித்தார். விபசார பெண்ணை குற்றஞ்சாடின ஜனங்களுக்கு இயேசு சொன்ன பதில் என்ன?

16. 
இயேசு யாரை கொலைபாதகன் என்றும் பொய்யன் என்றும் சொன்னார்?

17. 
இயேசு பிறவிக்குருடனை சுகமாக்குதல் இயேசு பிறவிக்குருடனை எப்படி சுகமாக்கினார். என்ன செய்யும்படி சொன்னார்?

18. 
சுகமான குருடன் சொன்ன சாட்சி என்ன?

19. 
இயேசுவே நமது மேய்ப்பர். நாம் அவருடைய ஆடுகள் நாம் இயேசுவின் ஆடுகளாயிருந்தால் செய்ய வேண்டிய 3 காரியங்கள் எவை?

20. 
நல்ல மேய்ப்பன் அவருடைய ஆடுகளுக்கு செய்வது என்ன?

21. 
பெத்தானியாவில் இயேசு லாசருவை உயிரோடே எழுப்புதல் மரித்து உயிரோடே எழுப்பியது யார்? அவனது சகோதரிகள் யார்?

22. 
மார்த்தாள், மரியாள் அழுத போது தானும் அழுத இயேசு,லாசருவை உயிரோடே எழுப்பிய காரணம் என்ன?

23. 
இயேசு கழுதை மேல் பவனியாக எருசலேமுக்குள் பிரவேசித்த போது, அவரை பார்த்து ஜனங்கள் சத்தமிட்டு சொன்னது என்ன?

24. 
இயேசுவே உலகத்திற்கு ஒளி, அவரை விசுவாசிக்கிறவன் இருளில் நடவாமல் இருப்பான். நாம் ஒளியில் நடக்க என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?

25. 
தேவ ராஜ்யத்திற்கு பங்குள்ளவர்களாக வேண்டுமானால், இருதயத்தில் சுத்தமும் தாழ்மையும் வேண்டும் என்பதை வெளிப்படுத்தவே இயேசு சீடர்களின் கால்களை கழுவினார். இயேசு நமக்கு கொடுத்த கட்டளை என்ன?

26. 
இயேசு சீஷர்களுக்கு கற்பித்த புதிய கற்பனை என்ன?

27. 
இயேசுவும் பிதாவும் ஒன்றாகவே இருக்கிறார்கள் இயேசு பிலிப்புவுக்கு, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று சொன்னார்?

28. 
இயேசு பரிசுத்த ஆவியை கொடுப்பதாக வாக்களித்தார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆலோசகரும், சத்திய ஆவியாகவும் இருக்கிறார். அவர் எங்கே தங்குவார்? என்ன கிரியை செய்வார்?

29. 
இயேசுவே மெய்யான திராட்சை செடி, நாம் கொடிகள் நாம் அதிகமாக கனி கொடுப்பது எப்படி?

30. 
இயேசு அவருக்கு சிநேகிதராக நாம் இருக்க நம்மை தெரிந்து கொண்டார். நாம் இயேசுவின் சிநேகிதராக இருக்க செய்ய வேண்டியது என்ன?

31. 
சத்திய ஆவியானவர் போதிக்கும் இரண்டு காரியங்கள் என்ன?

32. 
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஆலோசகர். அவருடைய ஆலோசனை என்ன?

33. 
விசுவாசிகள் யாவருக்காகவும் இயேசு ஜெபிக்கிறார். இயேசுவின் வேண்டுதல் என்ன?

34. 
நாம் இயேசுவில் வாழ்ந்தால், இயேசு நம்மில் வாழ்ந்தால், நாம் ஒருமனப்பாட்டில் தேறினவர்களாக இருப்போம்.

35. 
யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்." பிதா எனக்குத் தந்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ?" என்று இயேசு சொன்னார். இங்கு " பாத்திரம்" என்பது எதைக் குறிக்கிறது ?

36. 
பேதுரு எத்தனை முறை மறுதலித்தான்? அதற்கு பின் என்ன நடந்தது?

37. 
யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறைய விரும்பினர். ஏன்?

38. 
இயேசுவின் எலும்புகளில் ஒன்றும் முறிக்க ப்படுவதில்லை. இயேசு சிலுவையில் சொன்ன கடைசி வார்த்தை என்ன?

39. 
அதிகாலையில் வெறுமையான கல்லறையை மகதலேனா மரியாள் பார்த்து என்ன செய்தாள்?

40. 
மகதலேனா மரியாள் அழுதாள். இயேசுவின் கல்லறையின் அருகே காத்திருந்தாள். அடுத்து நடந்தது என்ன?

41. 
பேதுரு, மூன்று முறை தான் இயேசுவை நேசிப்பதாக உறுதி படுத்தினான். இயேசு தன்னைப் பின் பற்றும் பேதுரு என்ன செய்ய கட்டளை இட்டார்?

42. 
சத்திய சுவிசேஷத்தை க் குறித்து சாட்சி கொடுத்த யோவான், இந்த புத்தகத்தை எழுதினான். யோவான் இந்த புத்தகத்தை எவ்வாறு முடித்தார்?

Note: All the questions must be answered before submitting the quiz.